தமிழர்களின் புராதன விஞ்ஞானமாகிய சித்த மருத்துவம் தமிழர்களின் பண்பாட்டு வாழ்வியல் கருவூலமாகவும் அறிவியல் புதையலாகவும் திகழ்கின்றது. அழிந்து போகின்ற தேடற்கரிய சித்த மருத்துவ நூல்களையும் ஏடுகளையும் மீள் பதிப்புச் செய்து ஆவணப்படுத்துதல் மூலிகை மருத்துவம் சார்ந்த நூல்களை வெளியிடுதல் என்பன காலத்தின் கட்டாய தேவைகளாக அமைகின்றன. அறிவை உருவாக்குவது அறிவைப் பரப்புவது ஆகியன மக்களின் மேம்பாட்டுக்கு உதவியாக அமைகின்றது.
உலகத்து மக்களின் உயிர்களின் அறிவை அகற்றிட இயற்கை நமக்கு அருளிய நலம் உள்ள மூலிகைகள் இதுவென உணர்ந்து போற்றிட வழி உண்டாம் உலகினிலே.
மனித வாழ்வின் மட்டற்ற மகிழ்ச்சி உடல் ஆரோக்கியமே.
அன்றைய நாளில் வாழ்ந்தோர் வீட்டு வைத்தியம் ஆகிய சித்த மருத்துவத்திற்கு மதிப்பளித்து சித்த மருந்து மூலிகை வைத்தியத்தில் முழுமையான முக்கியத்துவம் அளித்து மூலிகை வைத்தியம் செய்து முற்றிலும் நோய் நீங்கப் பெற்றனர்.
எத்தகைய கொடிய நோய்கள் வரினும் வீட்டு வைத்தியம் ஆகிய சித்த வைத்தியம் தவிர வைத்திய முறைகளை நாடவில்லை.
I இயற்கையோடு இணைந்த வாழ்வு நடாத்தி இயற்கை விதிகளை பின்பற்றி என்றும் பூத்துக்குலுங்கும் புதுப்பொலிவுடன் உடல் ஆரோக்கியத்துடனும் காட்சியளித்தனர்.
இன்றைய நாளில் வாழ்வோர் நாகரிக பெரு காலம் அயல் நாட்டு மோகத்தாலும் ஆங்கில மருந்துகள் ஆன தீவிரமான இரசாயனக் கலவை கலந்த மருந்துகளை உண்டும் உடனுக்குடன் நோயைக் குணப்படுத்திக் கொள்ள அவளுக்கு உடல் நலத்தை கெடுத்துக் கொள்கின்றனர் முதலில் இவர்கள் நோயைக் குணப் படுத்தினாலும் பின்னர் அது தீய பல பக்க விளைவுகளை உண்டாக்கி விடுகின்றது மனித உடலின் கருவிகளான மூளை இதயம் நுரையீரல் கல்லீரல் போன்றவை களைப்படைய செய்து விடுகின்றன குளோரின் பென்சிலின் டெட்ராசைக்ளின் போன்ற ஊசி மருந்துகளின் பக்கவிளைவுகள் காது கண் பாதிப்படைய வைக்கின்றது ஆயுளை குறைத்து நீண்ட கால தீராத நோய்களை இந்த ஆன்ட்டி பயோட்டிக் மருந்துகள் செய்துவிடுகின்றன.
அலோபதி என்ற சொல்லின் பொருள் உடலில் நோய்களை அமுக்கி வைத்து குணப்படுத்துதல் என்பதே நாகரீகத்தை நாடும் இவர்கள் ஒரு நோய் தீர மருந்து உண்டு பல தீராத நோய்களை விலை கொடுத்து வாங்கி உடலினுள் உருவாக்கிக் கொள்கின்றனர் ஒவ்வாமை கோளாறுகள் உடலில் உருவாகி விடுகின்றன இயற்கையை விட்டு விட்டு செயற்கையாய் நாடி செயற்கை வாழ்வோர் நீண்டகாலம் நோய்களையும் பல கஷ்டங்களையும் அடைவர்.
இன்றைய விஞ்ஞானம் அயல்நாட்டு மூலிகைகளையும் நம் நாட்டு மூலிகைகளையும் ஆராய்ந்து நம் நாட்டு மூலிகைகளுக்கு அதிக அளவு ஆற்றல் இருப்பதை நிரூபித்து விட்டது இந்தியாவில் கிட்டத்தட்ட 7 ஆயிரத்துக்கும் அதிகமான மூலிகைச் செடிகள் இன்றைக்கும் குறிக்க பயன்பட்டு வருகின்றன இவற்றில் 427 மூலிகைகள் மிகவும் அபூர்வமானவை.
இந்திய மருத்துவ முறையான பாட்டி வைத்தியம் மருத்துவ முறை மிகத் தொன்மையானது இன்றும் பழக்கத்தில் இருந்து வரும் மருத்துவ முறைகளுள் அதிமுக்கியமானது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் எப்படி உபயோகப் படுத்தப்பட்டது அப்படியே இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது என்று 70 முதல் 90 விழுக்காடு மக்கள் பழங்கால இயற்கை சார்ந்த வீட்டு வைத்திய முறைகளை தான் நம்பி இருக்கின்றனர் நவீன ஆங்கில மருத்துவம் 3 முதல் 30 சதவிகித மக்களை ஏற்பட்டிருக்கின்றது.
புத்தகத்தை தரவிறக்கம் செய்ய Download
வீட்டு மருத்தவம்
Reviewed by Ebooker
on
12:56 PM
Rating: