நண்பர்களே இந்த பதிவில் முதலுதவி பற்றிய புத்தகத்தினை இணைத்துள்ளேன். தேவையான நண்பர்கள் தரவிறக்கி வாசித்துக் கொள்ளலாம்
முதலுதவி என்பது விபத்துக்குள்ளான ஒருவரின் உயிரைக் காப்பதற்கு அல்லது அவர் உடல் பாதிப்பை குறைப்பதற்கு முதலில் செய்யப்படும் ஒரு முக்கிய உதவியாகும் இதை மருத்துவர்தான் செய்ய வேண்டும் என்பது கட்டாயமல்ல எல்லோரும் செய்யலாம் கண்டிப்பாக செய்ய வேண்டும்.
முதலுதவி என்பது விபத்து நடந்த இடத்திலிருந்து வைத்தியசாலைக்கு ஒருவரைக் கொண்டு செல்வதற்கு இடைப்பட்ட தூரத்தில் பயிற்சி பெற்ற ஒருவர் நாள் விபத்துக்குள்ளானவர் இன் உயிருக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது அவரை காப்பதற்காக செய்யப்படும் உதவி என சுருக்கமாக வரைவிலக்கணம் படுத்தலாம்.
தற்போதுள்ள இக்காலகட்டத்தில் முதலுதவி அனைவரும் அறிந்திருக்க வேண்டியது மிகமிக கட்டாயமான ஒரு விடயமாகும்.
பாதிக்கப்பட்ட நபரின் உடல் நிலை அவர் எடுக்கும் இடம் அங்கு கிடைக்கின்ற முதல் உதவிப் பொருட்கள் போன்றவற்றை சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் உடனடியாகவும் வேகமாகவும் சமயோசிதமாகவும் பயன்படுத்தி முதல் உதவி செய்வதற்கு முதலுதவி பற்றிய அடிப்படை அறிவு சிறிதளவாவது நமக்குத் தேவை அப்போதுதான் முதல் உதவி செய்வதற்கு துணிவு வரும் அந்த அறிவைப் பெறுவதற்கு டாக்டர் கு.கனேசன் எழுதியுள்ள முதலுதவி என்ற இந்த நூல் நிச்சயம் உதவும்.
முதலுதவி பற்றி ஆங்கிலத்தில் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன தமிழில் விரிவான முதலுதவி நூல்கள் மிக அரிதாகவே கிடைக்கின்றன இந்தக் குறையை டாக்டர் கு கணேசன் இந்த நூல் மூலம் நோக்கியுள்ளார் காய்ச்சல் முதல் மாரடைப்பு வரை அனைத்து முக்கிய நோய்களுக்கும் முதலுதவி முறைகளை சொல்லியுள்ளார் காயம் ஏற்பட்டவர்கள் தண்ணீரில் மூழ்கியவர் வரை பல விபத்துக்களில் இவ்வாறு முதலுதவி செய்ய வேண்டும் என்று விரிவாகச் சொல்லியுள்ளார்.
இந்த நூலில் ஓர் முக்கிய விடயம் உள்ளது. அதாவது முதலுதவி செய்யும் போது நஅம் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமல்லாது என்ன செய்ய கூடாது என்பது பற்தியும் விளக்கியுள்ளர் நூலாசிரியர்.
அன்பான பெற்றோர்களே... இந்த காலகட்டத்தில் நீங்கள் மட்டும் முதலுதவி பற்றி அறிந்து கொள்ளாது உங்கள் குழந்தைகளுக்கும் முதலுதவியின் முக்கியத்துவம் மற்றும் முதலுதவி பற்றிய அறிவினை ஊட்டுங்கள் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த முதலுதவி கல்வியானது உங்கள் குழந்தைகளுக்கு பெரிதும் உதவலாம்.
முதலுதவி
Reviewed by Ebooker
on
5:31 PM
Rating: