இந்த ஏழரைச் சனி என்னதான் செய்யும் என்பதை பார்க்கலாம்.
மற்ற கிரகங்களை விட சனி கிரகம் பலமான சக்தி பெற்ற கிரகம் மட்டுமல்ல ஒரு ராசியில் அதிக காலம் அதாவது இரண்டரை வருடம் தங்கிப் பலன் செய்யும் கிரகம் ஆகும். அதனால் அவருக்கு மந்தன் என்றும் முடவன் என்றும் பல பெயர்கள் உண்டு ஒரு ராசியில் இரண்டரை வருடம் என்ற விகிதத்தில் 12 ராசிகளையும் ஒருமுறை சுற்றி வருவதற்கு 30 வருடங்கள் ஆகும் அந்த முப்பது ஆண்டுகளில் பொதுவாக மனித வாழ்க்கையிலும் நாட்டில் தொழில்துறை என எல்லாவற்றிலும் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுவது இயல்பு அதனால் முப்பது வருடத்துக்குமேல் சேர்ந்தாற்போல் யோகத்திலே திளைத்தவர்களும் இல்லை கஷ்டத்திலே இளைத்தவர்கள் இல்லை என்பார்கள்.
அவரவர் ராசிக்கு 12-ஆம் இடத்தில் சனி வரும்போது ஏழரைச் சனி ஆரம்பம் ஆகும் அது முதல் கட்டச் அங்கு இரண்டரை வருடம் இருக்கும் சனி விரயச் சனி எனப்படும் அடுத்து ஜென்ம ராசிக்கு மாறும் சனி ஜென்ம ராசியில் இரண்டரை வருடம் இருக்கும் அது ஜென்மச் சனி எனப்படும்.
அதைவிடுத்து விலகி ஜென்ம ராசிக்கு இரண்டாம் இடத்தில் சனி பெருகும்போது இரண்டரை வருடம் பாதச்சனி குடும்ப சனி பாத சனி எனப்படும் இப்படி மூன்று கட்டமாக வரும் சனியின் மொத்த காலம்தான் ஏழரைச் சனியின் காலம் எனப்படும் ஜாதக ரீதியாக ஒருவருக்கு வரக்கூடிய சனி தசை என்பது வேறு கோட் சரித தியாகம்ஏழரைச்சனிவேறு.
பிறந்ததிலிருந்து முப்பது வயதுக்குள் ஏற்படும் ஏழரைச்சனியின் தாக்கத்தை மிகத் தெளிவாகக் காணலாம் சனியின் முழுத் திறனும் தெரியும் முதல் சுற்று முடக்கி முயற்சியை தூண்டும் படிப்பில் கவனம் செலுத்தவில்லை காதல் கவன சிதறல் உறவினர்கள் மரணம் வேலையில்லா திண்டாட்டம் என்பது போல பல விதத்தில் பாதிப்புகள் இருக்கும் குழந்தை பருவம் முதல் டீன் ஏஜ் வரையிலான இந்த சுற்றில் பெற்றோருக்கு கருத்து மோதல் பிரிவு சந்தேகத்தால் சண்டை என்று பிரச்னைகள் வந்து நீங்கும் 12 வயதுக்கு மேல் சளி பிடித்தால் குழந்தையின் கவனம் சிதறும் சரியான கவனத்தைப் படிப்பில் செலுத்தாது ஸ்கூல் லேசாகிவிடும் 10 பிளஸ் 2 வகுப்பில் பெயில் ஆகும் குழந்தைகளின் பெரும்பாலானோருக்கு ஏழரைச் சனி நடந்து கொண்டிருக்கும் சிலருக்கு படிப்பு மற்றும் வித்தைக் உரிய கிரகமான புதன் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கும் அதனால் அவர்கள் தோல்வியுற நேரலாம் அவை விதிவிலக்கு.